அம்பாறையில் கச்சேரிக்கு முன்னுள்ள முஸ்லிம் கடைக்கு, தீ வைப்புஅம்பாறையில் அரசாங்க அதிபர் கட்டிடத்திற்கு முன் உள்ள முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான கடை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இனம் தெரியாத குழுவொன்றே இவ்வாறு முஸ்லிம் கடைக்கு தீ மூட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இன்று 22.05.2017 அதிகாலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பான்மையானோர் விரும்பி செல்லும் கடையாக இது காணப்பட்டுள்ளது.