சாய்ந்தமருது வறிய மக்களுக்கு குடிநீர் திட்டம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

சாய்ந்தமருது வறிய மக்களுக்கு குடிநீர் திட்டம்

Share Thisகல்முனை மாநகர முன்னாள் மேயர் டாக்டர் சிறாஸ் மீராசாஹிபின் வேண்டுகோளுக்கு இணங்க சாய்ந்தமருது பிரதேசத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்ற மக்களுக்கு குடி நீர் இணைப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 

ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இத்திட்டத்துக்கான முதற்கட்ட நிதியை முன்னாள் மேயர் சிறாஸ் மீராசாஹிபிடம் இன்று திங்கட்கிழமை கையளித்தார். 
சாய்ந்தமருது பிரதேசத்தில் வாழ்கின்ற வறிய மக்களுக்கு இலவச குடிநீர் இணைப்பினைப் பெற்றுக்கொடுப்பதற்கான விசேட திட்டமொன்றை கல்முனை மாநகர முன்னாள் மேயர் மேற்கொண்டு வருகின்றார். 

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, இத்திட்டத்துக்கு ஹிரா பௌண்டேஷன் முதற்கட்டமாக ஒரு இலட்சத்து அறுபதாயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்ததுடன், தொடர்ந்தும் உதவிகளை செய்வதாக உறுதியளித்தது. 


media unit of State Minister of Rehabilitation and Resettlement
R.Hassan

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE