ஏதன்ஸில் முதலாவது பள்ளிவாசலுக்கு அந்நாட்டு பாராளுமன்றில் அனுமதி


கிரேக்க தலைநகர் ஏதன்ஸின் முதல் உத்தியோகபூர்வ பள்ளிவாசலைக் கட்டுவதற்கு அனுமதி அளிக்கும் சட்டமூலம் ஒன்றுக்கு அந்நாட்டு பாராளுமன்றில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில் அரச கூட்டணியின் ஓர் அங்கமாகவுள்ள தீவிர இடதுசாரி கோல்டன் டோன் கிரேக்க சுதந்திரக் கட்சி மாத்திரமே இந்த சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்துள்ளது.
இது பள்ளிவாசலை கட்டுவதற்கான நிதி மூலங்களைக் குறிப்பிடுவதாகவும், அதன் நிர்வாகக் குழு கட்டமைப்பை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
மினராத் கோபுரம் இன்றி குறைந்த உயரம் கொண்டதாகவும், 350 பேருக்கு இடவசதி கொண்டதாகவும் கிரேக்க தலைநகர எல்லையில் இந்தப் பள்ளிவாசல் காட்டப்படுகிறது.
கட்டுமானப் பணிகள் பூர்த்தியாகும் பட்சத்தில் ஏதன்ஸ் நகரில் அமைக்கப்படும் முதல் உத்தியோகபூர்வ பள்ளிவாசலாக இது அமைப்பும். இதன் கட்டுமானப் பணிகள் எதிர்வரும் ஜுலை மாதம் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.