ஐ.எஸ்.ஐ.எஸ். இரத்தம் எடுப்பதாக பொய்ப் பிரசாரம் : சுகாதார அமைச்சு
சுகாதார சேவைகள் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு, சுகாதார அமைச்சு முறைப்பாடு செய்துள்ளது. 

இரவு வேளைகளில் சுகாதார அதிகாரிகள் எனக் கூறிக் கொண்டு, சிலர் இரத்த மாதிரிகளை பெறுவது போன்று எயிட் நோயை பரப்புவதாக, சில சமூக வலைத்தளங்கள் பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளன.  அத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கமே இதன் பின்னணியில் இருப்பதாகவும் பொய்ப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவருக்கே இரவு நேரங்களில் இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு பொய்யான தகவல்களை வழங்கும் சமூக வலைத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு முறையிட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜெயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஆலோசனையின் பேரில் விசா​ரணை செய்யுமாறு முறையிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.