கத்தார் அரசின் அதிகாரபூர்வ செய்தி இணையதளம் ஹேக் செய்யப்பட்டதாக அறிவிப்பு!கத்தார் அரசுக்கு சொந்தமான 'கத்தார் நியூஸ் ஏஜென்ஸி' எனும் அதிகாரபூர்வ செய்தித்தளம் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டு சில தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாகவும், தற்போது அந்த செய்தித்தளம் மீண்டும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், விஷமிகளை கண்டறியும் பணி பாதுகாப்புத் துறை வழியாக முடிக்கிவிடப்பட்டுள்ளதாகவும் கத்தார் அரசு தெரிவித்துள்ளது.
முடக்கப்பட்ட இணையதளத்தில் ஈரான், இஸ்ரேல் போன்ற நாடுகள் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்புடனான உறவுகள் குறித்தும் கத்தார் ஆட்சியாளர் பெயரில் தவறான தகவல்கள் பரப்பட்டிருந்ததை தொடர்ந்து நேற்று சமூக வலைத்தளங்களில் இப் போலித் தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தின.