பாதிக்கப்பட்ட கிணறுகளை இறைப்பதற்கு சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் வேண்டுகோள்(பிறவ்ஸ்)

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் காணப்படும் குடிநீர் குணறுகள் மற்றும் பொது வடிகாலமைப்புகளை சுத்தம்செய்வதற்காக, தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் கீழ் 400 பேரைக் கொண்ட சமூக அமைப்புகளின் அங்கத்தவர்கள் உள்ளடங்கிய விசேட செயலணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கமைய, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் சரத் சந்தரசிறி விதானவின் கண்காணிப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் காணப்படும் குடிநீர் கிணறுகளை சுத்தம் செய்வதற்குத் தேவையான நீர் இறைப்பு பம்பிகளை தந்துதவுமாறு அணுசரனையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த சமூக தொட்டுக்காக ஒரு மாத காலத்துக்கு பம்பிகளை வழங்கி உதவ விரும்புவோர் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தங்களை பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

0718114791 அல்லது 0727625950 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக உதவிப் பணிப்பாளரை தொடர்பு கொள்ளவும்.