வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்குடா அல்-கிம்மா நிறுவனத்தின் உதவிக்கரம்நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களிலும் வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, நூற்றுக்கும் அதிகமானோர் மரணமடைந்திருந்தனர். 

கல்குடா பிரசேத்தில் மட்டுமன்றி நடாளாவிய ரீதியில் மக்களுக்கான உதவிகளை வழங்கி வரும் அல்-கிம்மா நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அஷ்-ஷெக் எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) அவர்கள் 28.05.2017ம் திகதி இதுவிடயாக நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், உறுப்பினர்களுடனான அவசர கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார். 

அதன் பயனாக நிறுவனத்தின் தவிசாளரும், சவூதியரேபிய தனவந்தருமான அஷ்-ஷெய்க் அபூ ஹுஸாம் அவர்களுடனும் கலந்தாலோசித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்டமாக சுமார் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான உலர் உணவுகளை வழங்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர். 

அதன் தொடரில் நிறுவனத்தின் பணிப்பாளரின் வழிகாட்டலில் பிரதிப்பணிப்பாளர் எச்.எம். ஜாபிர் உள்ளிட்ட நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், தொண்டர்கள் கொண்ட குழுவினர் இன்ஷா அல்லாஹ் நாளை (01.06.2017) காலை பேறுவலை, தர்கா நகர் போன்ற பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களுக்கான உலர் உணவுப்பொதிகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

செய்தியாளர் 
எம்.ஐ.அஸ்பாக்