துபாயில் இஃப்தார் நேரத்தில் மஸ்ஜிதுகள் அருகே இலவச பார்க்கிங் வசதி !துபாயில் ரமழான் காலத்தில் மாலை 5 மணிமுதல் 7 மணிவரை இலவச பார்க்கிங் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில் நோன்பாளிகளின் நன்மையை கருதி தற்போது கூடுதலாக பள்ளிவாசல்களை சுற்றியுள்ள பார்க்கிங்குகளில் மஃரிப் பாங்கு சொன்னது முதல் 45 நிமிடத்திற்கு இலவச பார்க்கிங் சலுகையை துபை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

இந்த சலுகை முறையாக பார்க்கிங் பகுதிகளில் தங்களது வாகனங்களை நிறுத்துவோருக்கு மட்டுமே மாறாக போக்குவரத்திற்கு இடைஞ்சலாகவும் நடைபாதைகளில் நிறுவோருக்கும் இச்சிறப்பு சலுகை பொருந்தாது மாறாக வழமையான அபராதங்களை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News