சற்றுமுன் ROYAL PARK ஐ பொலிஸார் சுற்றிவளைப்புஞானசார தேரரை கைது செய்ய தேடுதல் வேட்டை முழு வீச்சில் ஆரம்பமாகியுள்ள நிலையில் லேக் டிரைவ்  ரோயல் பார்க் குடியிருப்பு பகுதியை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளாதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுபல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே ஞானசார தேரரின் கையடக்க தொலைபேசியை எடுத்துக்கொண்டு லேக் டிரைவில் அமைந்துள்ள ரோயல் பார்க் குடியிருப்புக்கு சென்றுள்ளதை தொடர்ந்து அவரை பின்தொடர்ந்து அங்கு பொலிஸார் சென்றுள்ளதாக அறியமுடிகிறது.

மேலும் தற்போது ரோயல் பார்க் குடியிருப்புக்கு வரும் வாகனங்கள் கடும் சோதனையிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை ரோயல் பார்க் குடியிருப்பு அமைச்சர்கள் மற்றும் வீஐபிக்கள் என பலருக்கு அங்கு அபாட்மண்ட் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.