இரு முஸ்லிம் நபர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்; 08 ஆம் கட்டையில் சம்பவம்வரிப்பாத்தான்சேனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த இரு முஸ்லிம் நபர்கள் மீது 08 ஆம் கட்டை (சிங்கள பகுதி) ல் வைத்து சிங்கள குழுவொன்று சரமாறியாக தாக்கியதாக எமது பிராந்திய செய்தியாளர் எஸ்.எம்.சன்சீர் தெரிவித்தார்.

நேற்ற இரவு 7 மணியளவில் மதுபோதையில் இருந்த  சிங்கள குழுவொன்று முஸ்லிம் நபர்களுக்கு தாக்கியதாக கிடைக்கப்பெற்ற செய்தியை அடுத்து பொலிஸாரிடம் எமது செய்திப் பிரிவு விசாரித்த போது மேற்படி சம்பவம் தனிப்பட்ட நபர்களின் சம்பவம் எனவும் இனவாத சம்பவம் இல்லை எனவும் வீதியை மறித்து நின்றமையினால் வந்த வினை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

தாக்கப்பட்ட நபர்கள் இருவரும் இறக்காம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை செய்தி தொடர்பாளர் மூலம் அறிய கிடைத்தது.