உலகில் சிறந்த 100 விமான சேவைகள் மதிப்பீட்டில் கட்டார் விமான சேவை முதலாம் இடம்அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
சர்வதேச ஸ்கை ட்ரெக்ஸ் உலகில் சிறந்த 100 விமான சேவைகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கையினை மேற்கொள்ளும்.

அவ்வாறு தெரிவு செய்யப்படும் சிறந்த விமான சேவைகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படும்.

அதற்கமைய 2017ஆம் ஆண்டுக்கான TOP 100 AIRLINES பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.

அதில் கட்டார் விமான சேவை முதலாம் இடத்தையும் ஸ்ரீலங்கன் விமான சேவை 81ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.

இதில் கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து கட்டார் விமான சேவை மூன்று தடவைகள் முதலாம் இடத்தையும், மூன்று தடவைகள் 2ஆம் இடத்தையும் பிடித்திருந்தது.

மேலும், 2012ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரை ஸ்ரீலங்கன் விமான சேவை பிடித்துள்ள இடம் பின்வருமாறு,

இதுவரை கணிக்கப்பட்ட பட்டியலின்படி இந்த வருடமே இலங்கைக்கு பாரியளவிலான பின்னடைவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2012 - 70ஆம் இடம்
2013 - 68ஆம் இடம்
2014 - 73ஆம் இடம்
2015 - 73ஆம் இடம்
2016 - 67ஆம் இடம்
2017 - 81ஆம் இடம்

இதுவரை கணிக்கப்பட்ட பட்டியலின்படி இந்த வருடமே இலங்கைக்கு பாரியளவிலான பின்னடைவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது