ஏறாவூர் அலிகார் மைதானத்தை புனரமைப்பு பணிகளின் முதற்கட்டம் 10 இலட்ச ரூபா செலவில் ஆரம்பம்ஏறாவூர் அலிகார் மைதானத்தை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைவாக பொறியியலாளர் ஹக்கீம் தலைமையில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கு தேவையான நிதிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதனை நேர்த்தியான முறையில் புனரமைப்பது தொடர்பான விடயங்கள் தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் முதற்கட்டமாக 10 இலட்ச ரூபா செலவில்  அலிகார் மைதானத்தை செப்பனிடுவதற்கான பணிகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொறியியலாளர் ஹக்கீம் குறிப்பிட்டார்.

அத்துடன் ஏற்கனவே கிழக்கு முதலமைச்சரால் ஏறாவூர் அலிகார் மைதானத்தின் அபிவிருத்திக்காக 50 இலட்ச ரூபாவுக்கும் மேற்பட்ட நிதியொதுக்கப்பட்டு மைதானத்தின்  பார்வையாளர் அரங்கு உள்ளிட்டவற்றை புனரமைப்பதற்கான திட்ட வரைபுகளும் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.