பொய்யான திருட்டு குற்றச்சாட்டு: 11 முஸ்லிம் வயது சிறுவன் மீது கொடூர தாக்குதல்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

பொய்யான திருட்டு குற்றச்சாட்டின் அடிப்படையில் 11 வயது முஸ்லிம் சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவை அடுத்த கிராமம் ஒன்றில் இஸ்மாயில் முஸ்லிம் சிறுவன் கடந்த் சில தினங்களுக்கு முன்பு மாயமானார். அவர் தற்போது கையின் நான்கு விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ளார்.

அவரை மொபைல் போனை திருடியதாக பொய்யாக கூறி ஒரு கும்பல் தாக்கியுள்ளது. மேலும் ஒரு தனிமையான இடத்திற்கு அவரை அழைத்துச் சென்று கையின் நான்கு விரல்களையும் துண்டித்துள்ளது அந்த கும்பல்.
இது தொடர்பாக இஸ்மாயிலின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.