கொலம்பியா:நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 11 பேர் பலிகொலம்பியா நாட்டில் சட்டவிரோதமாக உள்ள நிலக்கரிச்சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் கண்டினமார்கா மாகாணத்தில் சட்டத்திற்கு புறம்பாக உரிய விதிமுறைகளின்றி பல நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று ககுனுபா நகரில் உள்ள நிலக்கரிச்சுரங்கத்தினுள் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் சிக்கி சுரங்கத்தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 பேரை காணவில்லை எனவும் அவர்களின் நிலை தெரியவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலம்பியா நிலக்கரி ஏற்றுமதியில் ஐந்தாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.