மூக்கு இல்லாமல் பிறந்த அதிசய குழந்தை 2 ஆண்டுகளுக்கு பிறகு உயிரிழப்புஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
2015-ம் ஆண்டு மார்ச் மாதம் ஏலி தாம்சன் பிறந்தான்  (வயது 2) பிறந்தவுடன் இவனுக்கு மூக்கு இல்லாமல் கண்டதை அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இவனுக்கு ட்ராசோடாமி என்ற அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து குழந்தைக்கு நவீன சிகிச்சை மூலம் மூச்சு கொடுத்து வந்தனர்.  

ஏலி தாம்சன் கடந்த 3 மாதங்களுக்கு முன் தனது 2-வது பிறந்தநாளை கொண்டாடினான். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று சிறுவன் உயிரிழந்தான்.

அவனது தந்தை இது குறித்து சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
நேற்று இரவு (சனிக்கிழமை) எங்களின் சிறிய நண்பரை இழந்தோம். இவனது மறைவு எங்களை நீண்ட காலத்திற்கு காயப்படுத்தும். என் வாழ்கையில் இந்த அழகிய சிறுவன் என் மகனாக பிறந்ததற்கு நான் மிகவும் அதிரிஷடசாலியாக கருதுகிறேன்.

இவ்வாறு அந்த குழந்தையின் தந்தை கண்ணீர் மல்க பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.