2018ல் நடைபெறவிருந்த T20உலகக் கிண்ண தொடர் இரத்துச் செய்யப்படும் வாய்ப்புஅடுத்த ஆண்டு நடைபெற இருந்த ஐசிசி டி20 உலக கிண்ணப் போட்டித் தொடர் ரத்து செய்யப்பட்டு, 2020ல் நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘2018ல் நடத்த திட்டமிட்டிருந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டித் தொடரை துரதிர்ஷ்டவசமாக ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல அணிகளும் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளதால், இந்த தொடருக்கு திகதி ஒதுக்க முடியாத நிலையில் உள்ளது. 
எனவே, உலகக் கிண்ண டி20 தொடரை 2020ல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். இடம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. தென் ஆப்ரிக்கா அல்லது ஆவுஸ்திரேலியாவில் நடத்த வாய்ப்புள்ளது’ என்றார்.
இதற்கு முன்னர் உலகக் கிண்ண டி20 தொடர்கள் தென் ஆப்ரிக்கா (2007), இங்கிலாந்து (2009), மேற்கிந்திய தீவு (2010), இலங்கை (2012) மற்றும் இந்தியாவில் (2016) நடைபெற்றுள்ளன.