இன்றை(21) தவத்தின் இப்தாரில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு -21.06.2017

(றியாஸ் இஸ்மாயில்)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார தொழில்வாய்ப்புத்துறை இணைப்பாளரும்,கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,அக்கரைப்பற்று உதைப்பாந்தாட்ட லீக்கின் தலைவருமான ஏ.எல்.தவத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று மீராநகர் கடற்கரைப் பிரதேசத்தில் இன்று(21.06.2017) மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இப்தார் நிகழ்விலும், மார்க்க சொற்பொழிவிலும் அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று பிரதேச செயலக இளைஞர் அமைப்பாளர் என்.ரீ.அஸ்மத் தெரிவித்தார்.