Jun 20, 2017

டுபாய்: 21-வது சர்வதேச குர்ஆன் போட்டி பங்காளதேஷ் சிறுவனுக்கு முதல் பரிசு




துபாயில் நடைபெற்ற 21-ம் சர்வதேச திருக்குர்ஆன் உலகளாவியப் போட்டிகளின் விருது நிகழ்வின் நிறைவு நாளில் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அறிவு அறக்கட்டளையின் (Knowledge Foundation) தலைவரான ஷேக் அஹ்மது பின் முஹம்மது பின் ராஷித் கலந்துகொண்டு சிறப்பித்தார். 

திருக்குர்ஆன் மனனப் போட்டியில் தவறில்லாமல் ஓதி வெற்றி்பெற்ற முதல் பத்து போட்டியாளர்களுக்கான பரிசுகளையும் மந்திரி ஷேக் அஹ்மது வழங்கி கௌரவித்தார். 

வங்காளதேசத்தைச் சேர்ந்த முஹ்மது தாரிக்குல் இஸ்லாம்(13) முதல் பரிசான இரண்டரை லட்சம் திர்ஹம்களைப் பெற்றான். இரண்டாம் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ஹுஸைஃபா சித்தீக்கிக்கும் கிடைத்தன (இவருக்குத்தான் குர்ஆன் இசைப்புப் போட்டிக்கான முதல் பரிசும் கிடைத்தது).

மூன்றாம் பரிசு காம்பியாவைச் சேர்ந்த மொதவ் ஜோப், சவூதி அரேபியாவைச் சேர்ந்த அலோபைதன் அஹ்மது அப்துல் அஜீஸ், துருக்கியைச் சேர்ந்த ராஷித் அல்லானி ஆகிய மூன்று நபர்களுக்கு வழங்கப்பட்டது.

பஹ்ரைனைச் சேர்ந்த முஹானா அஹ்மதுக்கு ஆறாவது பரிசும், லிபியாவைச் சேர்ந்த முகமது அல்ஹாதி அல்பஷீர் நஜியா மற்றும் குவைத்தைச் சேர்ந்த ஒமர் அல்ரெஃபாய் ஆகியோருக்கு ஏழாவது பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒன்பதாவது பரிசு மூரித்தானியாவைச் சேர்ந்த முஹம்மது அபெக்காவிற்கு வழங்கப்பட்டது. 

ருவாண்டாவைச் சேர்ந்த ஹபிமானா மக்கீனி மற்றும் எகிப்தைச் சேர்ந்த முகமது நஜெப் கடோ ஆகிய இருவரும் பத்தாம் இடத்திற்கும் தேர்வாகினர்.

இந்நிகழ்ச்சியில், சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான உயர் பரிசு சவூதியில் உள்ள இரு புனித மசூதிகளின் காப்பாளராக விளங்கும் சவூதி அரேபியாவின் மாமன்னர் சல்மானுக்கு வழங்கப்பட்டது. 

மாமன்னரின் சார்பாக சவூதி அரேபியா நாட்டின் இஸ்லாமிய விவகாரத்துறை மந்திரி ஷேக் சலே பின் அப்துல் அஜிஸ் இந்தப் பரிசினைப் பெற்றுகொண்டார்.

இந்நிகழ்ச்சியில், உரையாற்றிய சவூதி அரேபியா நாட்டின் இஸ்லாமிய விவகாரத்துறை மந்திரி ஷேக் சலே பின் அப்துல் அஜிஸ், இரு புனித மசூதிகளின் காப்பாளராக விளங்கும் சவூதி அரேபியாவின் மாமன்னர் இந்த ஆண்டுக்கான சிறந்த இஸ்லாமிய ஆளுமை மட்டுமல்ல.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network