ஆப்கானில் கார் குண்டு வெடிப்பு, 24 பேர் பலி


ஆப்கானிஸ்தான் லஸ்கர்கா நகரில் கார் குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டதில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 60 பேர் காயமடைந்துள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து ஆப்கானிஸ்தான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
இதுவரை இக்குண்டு வெடிப்புக்கு யாரும் உரிமை கோரவில்லையெனவும் குறிப்பிடப்படுகின்றது.