கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபையிரின் தாயார் இன்று (28) காலமானார்(எஸ்.அஷ்ரப்கான்)

கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.சுபையிரின் தாயார் ஹாஜியாணி எஸ்.ரீ. ஆமினா உம்மா வயது (67) இன்று (28) காலை காலமானார்.

ஏறாவூர், காட்டுப்பள்ளி, குறுக்கு வீதியைச் சேர்ந்த அல்ஹாஜ் முகம்மது சரீப் என்வரின் துனைவியான ஆமினா உம்மா எம்.எஸ்.றபீக் (CTB), அல்ஹாஜ் எம்.எஸ்.மன்சூர் (பெற்றோலியக் கூட்டுத்தாபனம்), எம்.எஸ்.ஹாஜரா வீவி ஆகியோரின் தாயாருமாவார். அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் நாளை (29) இடம்பெறும்.