கத்தார் ஏர்வேசுக்கு வழங்கிய உரிமத்தை சவுதி அரேபியா ரத்து செய்தது, 48 மணி நேரம் கெடுஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

சவுதி அரேபியா, எகிப்து, பக்ரைன், அமீரகம், ஏமன் ஆகிய 5 நாடுகளும் கத்தாருடன் கொண்டிருந்த தூதரக உறவை திடீரென துண்டித்துக் கொண்டன. கத்தாரில் உள்ள தங்கள் நாட்டின் தூதரக அதிகாரிகளை உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்வதாகவும் இந்த நாடுகள் அறிவித்தன.

 கத்தாருடன் கொண்டுள்ள வான்வழி மற்றும் கடல்வழி போக்குவரத்தை துண்டிக்கவும் திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 5 நாடுகள் வரிசையில் லிபியா, மாலத்தீவுகள் ஆகிய நாடுகளும் இணைந்தது.

கத்தார் உடனான உறவை 7 நாடுகள் துண்டித்து உள்ளன. இது உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கத்தாருடன் தூதரக உறவை துண்டித்த சவுதி அரேபியா கத்தார் ஏர்வேசுக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்து உள்ளது. சவுதி அரேபியா விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் கத்தார் ஏர்வேஸ் அதனுடைய அலுவலகங்களை 48 மணி நேரங்களில் மூட கெடு விதித்து உள்ளது. 

கத்தார் ஏர்வேஸ் பணியாளர்களுக்கு வழங்கிய உரிமங்கள் திரும்ப பெறப்படும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கர்த்தார் ஏர்வேஸ் விமானங்கள் சவுதி அரேபியாவில் தரையிறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.