பொது பல சேனா அமைப்பின் செயற்பாட்டாளரின் அறையில் இருந்து 486 பொருட்கள்!குருநாகலை - மல்லவபிடிய முஸ்லிம் பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொது பல சேனாவின் செயற்பாட்டாளர்கள் என தெரிவிக்கப்படும் இருவரில் ஒருவருக்கு சொந்தமானதாக கூறப்படும் கடை அறையொன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன் போது ,  பத்திரிக்கைகள் , சுவரொட்டிகள் , ஆவணங்கள் , இருவெட்டுக்கள் உள்ளிட்ட 486 பொருட்கள் அங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இனங்கள் மற்றும ்மதங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் அவற்றில் வாசகங்கள் எழுத்தப்பட்டிருந்ததாக காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.

கண்டு பிடிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் காவற்துறை வௌியிட்டுள்ள அறிக்கை கீழே...