Header Ads

ad728
  • Breaking News

    கார் விபத்து - 5 வயது சிறுவன் உயிரிழப்பு



    (க.கிஷாந்தன்)

    கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அவிசாவளை பகுதியிலிருந்து கினிகத்தேனை பகதுலூவ பகுதியை நோக்கி சென்ற கார் ஒன்று 01.06.2017 அன்று அதிகாலை 1.30 மணியளவில் அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை நகரத்திற்கு அண்மித்த பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    மேலும் இவ் காரில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் குறித்த இருவர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

    உயிரிழந்த சிறுவனின் தந்தையும், தாயும், பாட்டியுமே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர். இவ்வாறு உயிரிழந்த சிறுவன் சனித் தேமிக்க (வயது – 5) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    உயிரிழந்த சிறுவனின் சடலம் கினிகத்தேனை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

    மரண விசாரணைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728