அட்டாளைச்சேனை கடற்கரையின் ஒரு பகுதியில் 500 சாராய போத்தல்கள்,1000க்கும் அதிகமான சிகரட் பெட்டிகள் சேகரிப்புபோதைப்பொருள் பாவனையற்ற புதியதோர் தேசம் உருவாக்குவோம் எனும் தொனியில் இன்று காலை எமது தலைமைபீடம் அட்டாளைச்சேனை கடற்கரையின் ஒருபகுதியில் போதைப்பொருள் பாவைனப் பொருட்களை சேகரிக்கும் நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது.
எமது அமைப்பின் தலைமைத்துவ சபை தலைவர் பஹத் ஏ.மஜீத் தலைமையில் காலை 6.30 க்கு ஆரம்பான சேகரிப்பு 8.30 அளவில் நிறைவடைந்தது, பின்னர் கிராஅத் உடன் ஆரம்பித்த ஊடக விளக்க நிகழ்வில், சாஹிர், அன்பாஸ், சக்கி, இன்பாஸ் ஆகியோர் உரையாற்றினர்.
500 சாராய போத்தல்கள், 250க்கும் அதிகமான பியர் டின்கள், 1000க்கும் அதிகமான சிகரட் பெட்டிகள் என்பன சேகரிக்கபட்டது குறிப்பிடத்தக்கது.