50 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து(க.கிஷாந்தன்)

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை – டயகம பிரதான வீதியில் லிந்துலை வைத்தியசாலைக்கு அருகாமையில் முச்சக்கரவண்டி ஒன்று 21.06.2017 அன்று இரவு 9 மணியளவில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த 04 பேர் படுங்காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த முச்சக்கரவண்டி தலவாக்கலை பகுதியிலிருந்து லிந்துலை பேர்ஹாம் தோட்ட பகுதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் முச்சக்கரவண்டியும் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.
 
முச்சக்கரவண்டியில் வேக கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.