இந்தியாவில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வில் 50 முஸ்லிம்கள் வெற்றிஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

இவ்வருடம் வெளியான சர்வீஸ் கமிஷன் தேர்வு முடிவுகளில் ஏற்கனவே முடிக்காமல் இருந்தவர்கள் உட்பட சுமார் 50 முஸ்லிம்கள் வெற்றியை உறுதி செய்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 2016 ஆம் ஆண்டு Union Public Service Commission (UPSC) தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதுவரை முடிக்காமல் இருந்தவர்களுடன் சேர்ந்த்து 50 முஸ்லிம்கள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 6 பெண்கள் என்பது குறிப்பிடத்தகக்து. முஸ்லிம்கள் அதிக அளவில் வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல்முறை. மேலும் 10 முஸ்லிம்கள் முதல் 100 இடங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு 36 முஸ்லிம்கள் சர்வீஸ் கமிஷன் தேர்வில் வெற்றி பெற்றிருந்தனர். 2015ல் 38 பேர் 2014 ல் 34 பேர் 2013 30 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.