இனவாதத்தை தூண்டுவதாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக 6 முறைப்­பா­டுகள்



நாட்டில் இனங்கள் மற்றும் மதங்­க­ளி­டையே முரண்­பா­டு­களைத் தோற்­று­விக்கும் வகை­யி­லான செயற்­பா­டுகள் அதி­க­ரித்­துள்­ளமை குறித்து நேற்­றைய தினம் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்ற கூட்­டத்தில்                               ஆரா­யப்­பட்­டுள்­ளது. 

முகநூல் பதி­வு­களில் வெளி­யி­டப்­பட்டு வரும் இன, மத பேதங்­களை தோற்­று­விக்கும் செயற்­பா­டுகள் குறித்தும் கவனம் செலுத்­தப்­பட்­டது. கடந்த சில வாரங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக 6 முறைப்­பா­டுகள் பொலிஸில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது. 

தந்­து­ரையில் முஸ்லிம் இளைஞன் புத்­த­ருக்கு எதி­ராக வெளி­யிட்ட முகநூல் பதிவு தொடர்­பிலும் விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டது. கண்டி, அஸ்­கி­ரிய, மல்­வத்த பீடங்­க­ளி­லி­ருந்து கலந்­து­கொண்ட குரு­மார்கள், பொலிஸார் தோர­யா­யவில் ஞான­சார தேரரை கைது செய்ய முயற்­சித்­தமை தொடர்பில் தங்களது கண்டனங்களை வெளியிட்டனர். 

அது தவறு என்றும் சுட்டிக்காட்டினர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வமத தலைவர்களின் கூட்டத்தை ஒவ்வொரு மாதமும் நடத்தி பிரச்சினைகளை உடனுக்குடன் இனங்கண்டு தீர்வு காண்பதாகவும் உறுதியளித்தார். சட்டமும் ஒழுங்கும் பாகுபாடின்றி அமுல் நடத்தப்படும் என்றும் கூறினார்.