எதிர்வரும் நாட்களில் வீதிக்கு மின்னொளி நிகழ்ச்சித் திட்டம் மாகாண சபையின் உண்மையான பணிகளை தேடித்தேடிச் சென்று கால்நடையாக நோன்பு என்றும் பாராமல் தேவைகளை நிறைவேற்றும் கிழக்கு முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் அவர்களுக்கு வாழ்த்துக்கள்"

1987 ம் ஆண்டுஇலங்கை இந்திய ஒப்பந்தத்தில் 13 வது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக 42 ம் இலக்க சட்ட மூலத்தின் பிரகாரம்இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக இலங்கையில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டது. இலங்கையின் அதிகாரப் பரவல் அடிப்படையில் பிரதேச மட்ட அதிகாரங்களை பன்முகப்படுத்தும் நோக்கில் மாகாணசபைகள்,உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு ஒரு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.அந்த வகையில் மூன்று அதிகாரப்பட்டியலின் பிரகாரம் அதிகாரங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன.
1.மத்திய அரசுப் பட்டியல்
2.
மாகாண சபைப் பட்டியல்
3.
ஒத்தியங்கு பட்டியல்என்றவாறு.
இவைகளின் அடிப்படையில் மாகாண சபைகள்உள்ளுராட்சி தாபனங்களின் அதிகாரங்கள்,பணிகளை பின்வருமாறு வகுக்கலாம்.
1.பொதுப்பாதைகள் தொடர்பானது.
2.பொது சுகாதாரம் தொடர்பானது.
3.மக்கள் பயன்பாட்டுச் சேவைகள் தொடர்பானது.
பொதுப் பாதைகள் எனும் போது,
புதிய பாதைகளை உருவாக்குதல்பாதைகளை பராமரித்தல்பாதைகளை அழகுபடுத்தல், #பாதைகளுக்கு #மின்னொளிகளை வழங்குதல் என்ற பல விடயங்களை குறிப்பிடலாம்.
பொது சுகாதாரம் எனும் போது,
மக்களுக்கு முறையான சுகாதார வசதியை பெற்றுக் கொடுத்தல், #முறையாக #கழிவகற்றலை மேற்கொள்ளல்,சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடிய விடயங்களை அகற்றுதல் என்றவாறு குறிப்பிடலாம்.
மக்கள் பயன்பாட்டுச் சேவைகள் எனும் போது,
#பூங்காக்களை அமைத்தல்வாசிகசாலைகளை உருவாக்கல்ஓய்வை பயனுள்ள முறையில் கழிப்பதற்கு முறையான திட்டங்களை அமுல்ப்படுத்தல்.
உண்மையில் இலங்கையில் எந்த நோக்கத்திற்காக மாகணசபைகள் உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை கிழக்கு மாகாணசபை அதிலும் குறிப்பாக கிழக்கின் முதல்வர் நடைமுறைப்படுத்துவது உண்மையிலேயே வரவேற்கத்தக்கதாகும். நோன்பு என்று கூட பார்க்காமல் இன்று வீதி மின்விளக்குகளை ஒளிர வைப்பதற்கு கிழக்கு முதல்வர் அவர்கள் எடுத்துக் கொள்ளும் பிரயத்தனங்கள் உண்மையில் பாராட்டத்தக்கதாகும்.
அடுத்த கிழக்கு முதல்வர் யார் வந்தாலும்இவ்வாறான மக்கள் நலன் திட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்பதற்கு ஒரு முன்னோடியாகச் செயற்படுவதை நாம் அவதானிக்கலாம்.

ஆக்கம்:எம் எல் எம் சுஹைல்
ஏறாவூர்