உணவளிக்க நாங்கள் தயார்: ரஷ்யாவுக்கு நன்றி தெரிவித்த கத்தார்அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

உணவளிக்க நாங்கள் தயார்: ரஷ்யாவுக்கு நன்றி தெரிவித்த கத்தார்
கத்தாருக்கு உணவு வழங்க தயாராக இருப்பதாக ரஷ்யா கூறியிருப்பதற்கு அந்நாடு நன்றி தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகளுக்கு கத்தார் ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டி அந்த நாட்டுடன் சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 நாடுகள் தூதரக உறவை துண்டித்துள்ளன.
கத்தாரை பொறுத்தவரை அங்கு எண்ணெய் வளம் நிறைந்திருந்தாலும் உணவுப் பொருட்களுக்கு முற்றிலும் சவுதி அரேபியாவை மட்டுமே சார்ந்துள்ளது. சரக்கு போக்குவரத்தை சவுதி அரேபியா நிறுத்தியிருப்பதால் கத்தாரில் தற்போது உணவு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் கத்தாருக்கு உணவளிக்க தயாராக இருப்பதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கத்தாரின் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் பின் அப்துரஹ்மான் அலி கூறும்போது, ஈரான் எங்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. மேலும் எங்களுக்கு தேவை ஏற்பட்டால் உணவு தர ரஷ்யா தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது