Jun 14, 2017

பதுளையில் வர்த்தக நிலையமொன்றில் தீ



பதுளையில் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்றில் இன்று பிற்பகல் தீ ஏற்பட்டுள்ளது.
பதுளை, முதியங்கன விகாரைக்கு பின்னால் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திலேயே இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயினால் கடையும் அருகிலுள்ள வீடொன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயினால் வர்த்தக நிலையத்தில் உள்ள பொருட்கள் பல சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network