பௌத்த பிக்குகளுக்கு யாரும் மோசமாக கதைக்க வேண்டாம் - மைத்திரி


“பௌத்த தேரர்­களை அவ­மா­னப்­ப­டுத்­தும் வகை­யில் சில சமூக இணை­யத்­த­ளங்­களில் செய்­தி­கள் வெளி­யா­கின்­றன. அதனை நான் ஒரு­போ­தும் அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை” என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறிசேன தெரிவித்தார். இதுதொடர்பில் அரச தலைவரின் செயலகம் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
களுத்துறை விகாரை வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்ற இலங்கை அமரபுர பிரிவின் சமய நிகழ்வில் அரச தலைவர் கலந்துகொண்டார். அதில் அவர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“பௌத்த தேரர்களை அவமானப்படுத்தும் வகையில் சமூக இணையத்தளங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் தொடர்பில் ஆழ்ந்த கவலை கொள்கின்றேன். அதனை தற்போதைய சமூகத்தில் ஏற்பட்டுள்ள பெரும் சீரழிவாகவாகவே நான் கருதுகின்றேன் சமூக முற்னேற்றத்துக்காகவே நவீன தொழில்நுட்பங்கள் பாவிக்கப்பட வேண்டுமே தவிர, சமூகத்தக்கு பாதிப்பு ஏற்படக்கூடியவாறோ, நாட்டில் அமைதியின்மை ஏற்படக்கூடியவாறோ அவற்றை பயன்படுத்தக்கூடாது.
நவீன தொழில்நுட்பத்துடன் நாளுக்குநாள் சீர்குலைந்து வரும் சமூகத்தை பௌத்த கோட்பாடுகளே அமைதிப்படுத்தும் எனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், பெரும்பாலான சமூக பிரச்சினைகளுக்கு பௌத்த கோட்பாட்டில் தீர்வுகள் உள்ளன.
அனைத்து இனங்களுக்குமிடையே அமைதி மற்றும் சகோதரத்துவத்துடன் வாழும் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக மதகுருமார்கள் முன்னின்று செயற்பட வேண்டும்” என்று மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.
இலங்கை அமரபுர பிரிவின் துறவிகள் நேற்றுத் தொடக்கம் ஜூலை மாதம் 3ஆம் திகதிவரை களுத்துறை விகாரையில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர். அமரபுர பிரிவின் இலக்கிய நூல் அரச தலைவரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
நாடாளுமன்றுக்கு அருகிலுள்ள 98 பரப்புக் காணியை அமரபுர பிரிவுக்கு வழங்கும் உறுதிப்பத்திரம் அரச தலைவரால் வண. கொட்டுகொட தம்மாவாஸ தேரரிடம் வழங்கப்பட்டது – என்றுள்ளது.