நூருல் மொஹிதீன் ஜீம்மா பள்ளிவாசல் திறந்து வைப்பு; தேரர்களும் பங்கேற்பு

சிலோன் முஸ்லிம் நுவரெலியா செய்தியாளர்

நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பத்தனை நூருல்  மொஹிதீன் ஜீம்மா பள்ளிவாசல் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு 10.06.2017 அன்று மாலை திறந்து வைக்கப்பட்து.

பள்ளிவாசலின் தலைவர் பசூர் மொஹாமட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நாவலப்பிட்டி ஹாஷ்மி அரபிக் கல்லூரியின் உப அதிபர் மௌலவி நசீர் (ஹாஷ்மி) கலந்து கொண்டதோடு, அட்டன் டிக்கோயா நகரசபையின் முன்னால் தலைவர் எம்.ஏ.எஸ்.அபுசாலி, செயலாளர் ஹாரிஸ், பத்தனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, சர்வமத தலைவர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

திறப்பு விழாவின் பின் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வும் நடைபெற்றது.