வீதியில் குப்பையினை வீசிய நால்வருக்கு எதிராக அட்டன் பொலிஸாரால் சட்ட நடவடிக்கை(க.கிஷாந்தன்)

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் எல்லைப்பகுதியில் 21.06.2017 அன்று குப்பையினை வீதிக்கு வீசிய நான்கு பேருக்கு எதிராக அட்டன் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

21.06.2017 அன்று அதிகாலை முதல் அட்டன் நகர சபை எல்லை பகுதியில் வீதியில் குப்பையினை வீசுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக விசேட குழு சிவில் உடையில் நியமிக்கப்பட்டு பழைய குப்பை தொட்டிகளுக்கு அருகாமையில் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு குப்பைகளை வீதியில் வீச வேண்டாம் என அறிவுறுத்தல் பலகைகள் போடப்பட்டுள்ளதோடு, சீ.சீ.டீ.வீ கெமராக்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

இதனால் இவ்விடங்களில் குப்பையினை வீசுவதற்காக வருகை தந்தவர்களுக்கே இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களை பொலிஸார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அட்டன் நீதி மன்றத்தில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளன.

அட்டன் நகரில் கடந்த 18 நாட்களுக்கு மேலாக குப்பைகள் அட்டன் நகர சபையினால் எடுக்கப்படாமையினால் பல சூழல் பிரச்சினைக்களுக்கு முகம் கொடுக்க நேரிடன. இதனால் நகரம் எங்கும் குப்பை பெருகி துர்நாற்றம் வீசியதுடன் பாரிய சூழல் பிரச்சினையும் தோன்றின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 15 திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றும் அட்டன் நகரில் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து அவ்விடத்திற்கு வருகை தந்து பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் பத்தனை பகுதியில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார். எனினும் பத்தனை மக்கள் எதிர்ப்பு தெரிவித்தன் காரணமாக குப்பை பிரச்சினை மீண்டும் தொடர்ந்ததை தொடர்ந்து ஆறுமுகன் தொண்டமான் வசிப்பிட வளாகத்தில் புதைக்கப்பட்டன.

அத்தோடு 21.06.2017 அன்று அட்டன் டிக்கோயா நகர சபை அதிகாரிகள், அட்டன் பொலிஸார், இரானுவத்தினர், சுகாதார பரிசோதகர் ஆகியோர் இணைந்து குப்பைகள் முகாமைத்துவபடுத்துவது தொடர்பாக மக்களுக்கு துண்டுபிரசுரங்களை விநியோகித்ததோடு, இது தொடர்பாக மக்களுக்கு தெளிவுப்படுத்தினர்.