யூ.கே. நாபீர் விடுத்துள்ள புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி(எஸ்.அஷ்ரப்கான்)

இஸ்லாமிய மார்க்கம் வெளிப்படுத்துகின்ற பொறுமை, சகிப்புத்தன்மையின் வெளிப்பாடாக புனித நோன்பினை நோற்ற முஸ்லிம் சகோதரர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்ட மனிதப் புனிதர்களாக ஆகிய நிலையில் இப்பெருநாளை கொண்டாடுகின்றோம். இந்நாளில் சகோதரத்துவமும், இனங்களுக்கிடையிலான ஒற்றுமையும் ஓங்குவதற்கு வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக என்று நாபீர் பௌண்டேசன் தலைவரும் பொறியியலாளருமான யூ.கே. நாபீர் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் அவ்வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடும்போது,  

முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராகவும்முஸ்லிம் மக்களுடைய மார்க்க கடமைகளுக்கு எதிராகவும்சில பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் மிக மோசமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் நாம் நோன்பு பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.

கடந்த ஒரு மாத காலம் அமல்கள் செய்துவிட்டு பகல் நேரத்தில் பட்டினி இருந்து நோன்பு பிடித்துவிட்டு புனிதமான பெருநாளை கொண்டாடிக்கொண்டிருக்கும் நாம் உலக முஸ்லிம்கள் எல்லோருக்கும் அல்லாஹ்வின் பாதுகாப்பையும் தாம் பிறந்த நாட்டிலே அச்சமற்றவர்களாக வாழ்வதற்கான சூழலையும் வேண்டி பிரார்த்திப்போமாக.

நமக்கு பாதுகாப்பு வழங்கிஎமக்கிடையில் ஒரு புரிந்துணர்வுஒற்றுமை,பரஸ்பரத்தோடு வாழ்வதற்கான சூழ்நிலையை எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனால் மாத்திரமே உருவாக்கித் தர முடியும். நமது நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதையஅமைதி நிரந்தர அமைதியாக மாற்றமடைய இரு கையேந்தி பிரார்த்திக்க வேண்டும்.

இந்நன்நாள் இலங்கைத் திருநாட்டின் சகல இன மக்களும் சுபீட்சமாக ஒற்றுமையுடன் வாழ்வதற்கான வழியை அனைத்து உள்ளங்களிலும் ஏற்படுத்த வேண்டும் என பிரார்த்திக்கின்றேன் என்று பொறியியலாளர் யூ.கே.நாபீர் புனித நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.