அமைச்சர்களுக்கு அவசர அழைப்பு விடுத்த ஜனாதிபதிஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அவசர கூட்டம் ஒன்று இன்று மதியம் 12.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இக் கூட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது,

இதன்போது நாட்டில் அனர்த்த நிலைமையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அதனுடன் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது