நுகேகொடயில் முஸ்லிம் ஒருவரின் வர்த்தக நிலையம் ஒன்று தீ பற்றி எரிகிறது!நுகேகொட விஜராம பகுதியில் இயங்கி வந்த அக்குரணையைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் தீ பற்றி எரிவதாக தகவல் கிடைத்துள்ளது.

சில நாட்களாக வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் தணித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வர்த்தக நிலையம் எரிக்கப்பட்டுள்ளது. அக்குரணை ஏழாம் கட்டடையைச் சேர்ந்த ஆஷிக் என்பவரது வர்த்தக நிலையமே எரிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.