அல்-கிம்மாவின் இப்தார் நிகழ்வுMI. அஸ்பாக்
நாடளாவிய ரீதியில் பல்வேரு சமூகப் பணிகளைச் செய்து வரும் அல்கிம்மா நிறுவனமானது ரமழான் காலங்களில் உலர் உணவுப் பொருட்கள் வழங்குதல் மற்றும் பொதுவான இப்தார் நிகழ்ச்சிகள் நாடாத்துதல் போன்ற நிகழ்வுகளையும் செய்து வருகிறது.
அதன் தொடரில் இந்த வருடமும் மாபெரும் இப்தார் நிகழ்வொன்று ஓட்டமாவடி மஸ்ஜித் அந்-நஹ்ர் பள்ளிவாயலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுமார் 600க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இவ் இப்தார் நிகழ்ச்சியில் நோன்பு திறந்ததும் மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து இராப் போசனமும் வழங்கப்பட்டது.
இப்தார் நிகழ்ச்சிகளை நடாத்துவதன் மூலம் சமூக சீர் திருத்த மார்க்க உபன்யாசங்களைச் செய்வதே நோக்கமாகும்.
அதற்கமைய நடைபெற்ற இப்தார் நிகழ்வில் நிறுவணத்தின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ். ஹாறுன் ஸஹ்வி அவர்கள் மார்கச் சொற்பொழிவு ஒன்றினையும் நிகழ்த்தினார்.
இதன் போது உரையாற்றிய அவர் இருதிப் பத்தில் செய்ய வேண்டிய அமல்கள் தொடர்பிலும், போதைக்கு அடிமைப் பட்டுள்ள இளைஞர்களின் நிலை பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் தெளிவு படுத்தினார்.