Jun 20, 2017

வடக்கிற்கான தேசிய காங்கிரஸின் அரசியல் பயணமென்பது காலத்தின் தேவை.அஸ்மி அப்துல் கபூர்
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல் வேறு அமைச்சு பதவிகள் வகித்து பரந்து பட்ட சேவைகளை தேசிய காங்கிரஸ் மேற் கொண்ட போதும் வாக்குகளுக்காக அரசியல் செய்யவில்லை, அந்தந்த பிரதேச மக்கள் பிரதிநிதிகளுக்கு ஊக்கமளித்து பல் வேறு உதவிகளையும் புரிந்து வந்தது...

திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார் போன்ற மாவட்டங்களில் பல் வேறு செயற்திட்டங்களை மக்கள் வியக்கும் அளவுக்கு மேற் கொண்டோம்.
வாக்குகளை நம்பி எங்கும் தேசிய காங்கிரஸ் பயணப்பட வில்லை..
ஆனால் ஆட்சி மாற்றம் இடம் பெற்ற பிறகு மக்கள் நம்பி வாக்களித்த தலைமைகள் தொடர்பில் முஸ்லீம் மக்களே அச்சப்படுகின்ற சூழல் உருவாகி இருக்கிறது. முஸ்லிம் தலைவர்களிடையே சோரம் போதல் என்கின்ற விடயம் தலை விரித்தாடுகிறது.

தமது சமுகத்தை தாம் சோரம் போன எஜமானர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப வழி நடத்தும் செயற்பாடு எங்கு ஆரம்பித்தது என்பதை விட சிறந்த உதாரணமாக கடந்த ஊவா மாகாணத்தில் இடம் பெற்ற மாகாணசபை தேர்தலில் பஷில் ராஜபக்ச அவர்களுடன் இணக்கப்பாட்டுக்கு வந்த முஸ்லீம் தலைவர்கள் ஐ.தே.க. வழமையாக செல்லுகின்ற வாககுகளை குறைப்பதற்க்கு இணைந்து போட்டியிட்டு பதுளை மாவட்ட முஸ்லீம் பரதிநிதிதுவத்தை இல்லாமல் செய்தனர்.

பின்னர் முஸ்லீம் மக்கள் மீது இன நெருக்கடி ஏற்பட்ட போது அமைச்சரவையில் இருந்தவர்கள் சம்பிக்க ரணவக்க தான்இதன் பிதாமகன் என புரிந்து கொண்டும்

அவர் நல்லாட்ச்சியின் பக்கம் மாறிய பின்னரும்
மக்களின் உணர்வுகளுக்கு தீனி போட்டு தாம் தமது அதிகாரத்தையும் தமக்கு வழங்கப்படும் பணம் தொடர்பாகவுமே கரிசனை கொண்டு சர்வதேசத்தையும் டயஸ்போரா வையும் தமது எஜமானர்கள் ஆக்கி கொண்டனர்
தொடரும் நல்லாட்சியில் தமது சொந்த அதிகார நலனுக்காக முஸ்லீம் சமுகத்தின் பிரச்சினைகளை கையிலெடுத்து பின்னர் மக்களை அவர்களின் தேவை நிறைவடைந்ததும் சமாதானப் படுத்துவதையும் காண முடியும்.
உதாரணமாக வில்பத்து, மாயக்கல்லி போன்ற அண்மைக்கால பிரச்சினைகளை கூற முடியும்.
இவ்வாறான சூழலில் மக்கள் நலனுக்காக உண்மை க்கு மாற்றமில்லாத வகையில் மக்களை வழி நடத்தி மக்கள் புரிந்து கொள்ளாமல் தனது அதிகாரத்தை இழந்து இன்று நாம் தவறிழைத்து விட்டதாக மக்கள் அங்கலாய்கின்ற நிலை தேசிய காங்கிரஸ் கட்சியின் விடயத்தில் உணரப்பட்டிருக்கிறது..
மக்களின் அடிப்படை விடயங்களை தீர்க்க முடியமால் இன முறுகலை தமக்கு சாதகமாக்கி அரசியல் செய்யும் நபர்களை தோலுரித்து காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது
இதற்காக முஸ்லீம்கள் வாழுகின்ற வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட அணைத்து பிரதேசங்களிலும் மக்களை விளிப்புணர்ச்சியடைய செய்ய வேண்டியது காலத்தின் தேவை
அதற்காகவே நாம் வடக்கு மாகாணத்திலும் எமது கட்சியின் செயற்பாடுகளை விஸ்தரிக்கிறோம்
ஒவ்வொரு பிரதேசங்களிலும் எமது மக்களை சந்தித்து கபளீகரம் செய்யப்பட்ட எம் அரசியல் அடையாளத்தை பேச இருக்கிறோம்
நீதியான சுதந்திரமான அரசியலையும் சுயநலமற்ற வியாபார நோக்கற்ற அரசியலை இந்த மக்களுக்கு கற்பிக்க எம் தலைமையோடு கைகோர்க்க வடமாகாணத்தில் தயாராகியுள்ள உறவுகளை இணைத்துக் கொண்டு பயணம் தொடரும்
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post