திருமலையில் இன நல்லுறவை சீர்குலைக்க விசமிகள் களத்தில்-இம்ரான் எம்.பிதிருகோணமலையில் ஒற்றுமையாக வாழும் மூவினத்தவரின் இன நல்லுறவை சீர்குலைக்க விசமிகள் திட்டமிட்டு அதை செயற்படுத்திக் கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார் இன்று அதிகாலை இனம் தெரியாதவர்களால் தாக்கப்பட்ட திருகோணமலை பெரியகடை பள்ளிவாயலை பார்வையிட்ட பின் இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கமளிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இங்கு மூவின மக்களும் ஒடுமையாகவே வாழ்கின்றனர் ஆனால் இதை சீர்குலைத்து தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த சில குழுக்கள் களத்தில் இறங்கியுள்ளன அண்மையில் திருகோணமலை மாவட்டம் முழுவதும் இடம்பெற்ற சம்பவங்களை உற்றுநோக்கினால் இதை தெளிவாக அவதானிக்கலாம் ஆகவே பொதுமக்களாகிய நாம் ஒற்றுமையாக வாழ்வதன் மூலம் அவ்வாறான  தீய சக்திகளுக்கு சிறந்த பாடமொன்றை புகட்டவேண்டும்.

இச்சம்பவம் தொடர்பாக கிழக்குமாகாண ஆளுநர் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கு கொண்டுவந்துளேன் விரைவில் குற்றவாளிகளை கைதுசெய்வதொடு இப்பிரதேசத்தின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு கூறியுளேன் என தெரிவித்தார்.

ஊடகப்பிரிவு