இன ஐக்கியத்தைப் பேணும் வகையில் இறக்காமம் குடிவில் பிரதேசத்தில் இப்தார் நிகழ்வு(எம்.ஜே.எம்.சஜீத்)

இன ஐக்கியத்தைப் பேனும் வகையில் இறக்காமம் குடிவில் நன்னீர் மீனவர் சங்கம் ஏற்பாடு செய்த மூவின மக்களும் கலந்துகொள்ளும் இப்தார் நிகழ்வு நேற்று (5) குடிவில் ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் இஸ்லாம், பௌத்த மற்றும் இந்து மதத்தலைவர்கள் உட்பட மாணிக்கமடு, தீகவாபி பிரதேச தமிழ், சிங்கள மக்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது கிழக்கு மாகாண எதிர்க்கட்சித்தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ.மன்சூர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.