அட்டாளைச்சேனை நடுவர்கள் அமைப்பின் இப்தார் நிகழ்வு(எம்.ஜே.எம்.சஜீத்)

அட்டாளைச்சேனை விளையாட்டு நலன்புரி நடுவர்கள் அமைப்பின் இவ்வருடத்திற்கான இப்தார் நிகழ்வு நேற்று (8)  அட்டாளைச்சேனை அல்-முனீரா பெண்கள் உயர் பாடசாலையில் இடம்பெற்றது.

அமைப்பின் தலைவரும், அம்பாரை மாவட்ட மெய்வல்லுநர் விளையாட்டு பயிற்றுவிப்பாளருமான எஸ்.எல்.தாஜூதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், உயர் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், உலமாக்கள், நடுவர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது அஷ்ஷேஹ் என்.ரீ.நசீர் மௌலவியினால் மார்க்க சொற்பொழிவொன்றும் நிகழ்த்தப்பட்டது.