Jun 29, 2017

அதி­கார பகிர்வு குறித்து மத்­திய அரசு மாகா­ண­ ச­பைகளுக்கிடையே முரண்பாடு
அதி­காரப் பர­வ­லாக்கல் தொடர்பில் கட்­சி­க­ளுக்கு இடையில் பொது இணக்­கப்­பாடு ஏற்­பட்­டுள்ள போதிலும் அதி­கா­ரங்­களை பெற்­றுக்­கொள்­வதில் மத்­திய அரசு மற்றும் மாகா­ண­ச­பை­க­ளுக்கு இடை­யி­லேயே முரண்­பா­டுகள் எழுந்­துள்­ளன.

தீர்­வுகள் தொடர்பில் ஆழ­மாக கலந்­தா­லோ­சிக்­க ­வேண்­டி­யுள்­ளது என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.  அர­சியல் அமைப்பு தொடர்­பி­லான இடைக்­கால அறிக்கை தொடர்பில் பிர­தான கட்­சிகள்  இணக்கம் தெரி­வித்­துள்­ளன. இடைக்­கால அறிக்கை  ஆகஸ்ட் மாதம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சியல் அமைப்பு மறு­சீ­ர­மைப்­புகள் தொடர்­பி­லான மாநாடு நேற்று பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. இதில் சிறப்பு அதி­தி­யாக கலந்­து­கொண்ட பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,
இலங்­கையின் மிகவும் முக்­கி­ய­மான வேலைத்­திட்டம் ஒன்றை முன்­னெ­டுக்கும் முயற்­சியில் அர­சாங்கம் செயற்­பட்டு வரு­கின்­றது.

இலங்­கையின் நீண்­ட­கால பிரச்­சி­னைகள் மற்றும் முரண்­பா­டு­களை தீர்க்கும் வகையில் நாம் சிறந்­த­தொரு தீர்வை முன்­வைக்கும் நோக்­கத்­தி­லேயே புதிய அர­சியலமைப்பு ஒன்றை உரு­வாக்கும் முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். குறிப்­பாக தென்­னா­பி­ரிக்கா போன்று ஒரு தீர்வு பெறப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

அதற்­கான ஆலோ­ச­னை­க­ளையும் அறி­வு­ரை­க­ளையும் நாம் பெற்று மாற்றம் ஒன்றை மேற்­கொள்ள முயற்­சித்து வரு­கின்றோம். தீர்­வுகள் தொடர்பில் நகர்­வு­களை மேற்­கொள்ள நாம் முழுப் பாரா­ளு­மன்­றத்­தையும் அர­சியலமைப்பு சபை­யாக மாற்றி குழுக்­களை நிய­மித்து மக்­களின் கருத்­துக்­களை பெற்று வரு­கின்றோம்.

இரண்டு பிரி­வு­களில் ஆறு உப­கு­ழுக்­களை அமைத்து மக்­களை கருத்­துக்­களை பெற்­றுக்­கொள்ளும் நட­வ­டிக்­கைகள் மற்றும் அர­சியல் கருத்­துக்கள் பெறப்­பட்­ட­துடன் வழி­ந­டத்தல் குழு பிர­தான விட­யங்கள் தொடர்பில் கலந்­தா­லோ­சித்து வரு­கின்­றது.

குறிப்­பாக சகல அர­சியல் கட்­சி­களின் நிலைப்­பா­டுகள் ஆரா­யப்­பட்டு முரண்­பா­டு­க­ளுக்கு அப்பால் ஓர் ஒரு­மைப்­பாட்டை நோக்கி பய­ணிக்க வேண்டும். பிர­தா­ன­மாக மக்­களின் கருத்­துக்­களை முழு­மை­யாக உள்­வாங்­கிய, மக்­க­ளினால் உரு­வாக்­கப்­பட்ட ஒரு  அர­சியலமைப்பின் மூலமே இந்த நாடு ஆளப்­பட வேண்டும்.

அதற்­கான நகர்­வு­களை மேற்­கொண்டு நாட்டின் சகல பகு­தி­க­ளிலும் சகல மக்­களின் கருத்­துக்­களை உள்­வாங்கி அறிக்­கை­யினை உப­கு­ழுக்கள் தயா­ரித்­துள்­ளன.

மக்கள் முரண்­படும் நிலையில் எம்மால் தீர்வு ஒன்றை நோக்கி பய­ணிக்க இய­லாது. பெரும்­பான்மை மக்­களின் கருத்­துக்கள் மற்றும் சிறு­பான்மை மக்­களின் கருத்­துக்கள் என தனித்து பார்க்­காது இலங்­கை­யர்­களின் கருத்­துக்கள் என்ற அடிப்­ப­டியில் கருத்தில் கொள்ள வேண்டும்.

வழி­ந­டத்தல் குழுவின் மூலம் அர­சியலமைப்பு தொடர்­பி­லான இடைக்­கால அறிக்கை இந்த ஆண்டு ஜன­வரி மாதம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்க இருந்த போதிலும் ஒரு­சில கார­ணிகள் கார­ண­மாக எம்மால் இந்த விட­யத்தை மேற்­கொள்ள முடி­யாது போயுள்­ளது.

எனினும் ஆகஸ்ட் மாதம் அர­சியலமைப்பு இடைக்­கால அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும். இடைக்­கால அறிக்கை தொடர்பில் கடந்த காலத்தில் பிர­தான இரண்டு கட்­சிகள் இடையில் பேச்­சு­வார்த்தை நடந்­துள்­ளது. அதேபோல் ஏனைய சிறு­பான்மை மற்றும் சிறிய கட்­சி­க­ளுடன் நாம் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்­துள்ளோம்.

இந்த விட­யங்­களில் இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­பட்­டுள்­ளன. கொள்கை ரீதி­யி­லான இணக்­கப்­பாட்­டையும் எம்மால் எட்ட முடிந்­துள்­ளது.
அதி­காரப் பர­வ­லாக்கல் என்­பது மிகவும் அவ­சி­யப்­படும் ஒரு கார­ணி­யாகும்.

ஆனால் எந்த சந்­தர்ப்­பத்­திலும் நாட்டில் பிரி­வி­னை­யினை ஏற்­ப­டுத்த இட­ம­ளிக்க முடி­யாது. அதேபோல் பெளத்த மதம் ஒரு­போதும்  பின்­வாங்­கப்­பட  போவ­தில்லை. அதேபோல் ஏனைய மதங்­களும் சம உரி­மையில் பாது­காக்­கப்­படும். அதி­காரப் பர­வ­லாக்கல் தொடர்பில் முரண்­பா­டுகள் உள்­ளன. கட்சி ரீதியில் கருத்து முரண்­பா­டுகள் உள்­ளன.

மாகாண சபை அதி­கா­ரங்கள் உரிய மட்­டத்தில் பகி­ரப்­பட வேண்டும்.  ஆரம்­பத்தில் அதி­காரப் பகிர்வு தொடர்பில் கட்­சி­க­ளுக்கு  இடையில் முரண்­பா­டுகள் இருந்த போதிலும் இன்று கட்­சிகள் பொது இணக்­கப்­பாடு ஒன்றை எட்­டி­யுள்­ளனர். எனினும் இன்று அதி­கார பர­வ­லாக்கல் தொடர்பில் மாகா­ண­ச­பை­க­ளுக்கும் மத்­திய அர­சாங்­கத்­துக்கும் இடை­யி­லேயே முரண்­பா­டுகள் ஏற்­பட்­டுள்­ளன.

13 ஆம் திருத்­தத்தை கொண்­டு­வ­ரு­வதில் மாகாண முத­ல­மைச்சர் மற்றும் மத்­திய அர­சாங்­கத்­திற்கு இடையில் முரண்­பா­டுகள் காணப்­பட்டு வரு­கின்­றன.

எனினும்,  மத்­திய அர­சாங்கம் மற்றும் மாகா­ண­சபை இடை­யி­லான முரண்­பா­டுகள் ஏற்­ப­டாத வகையில் செயற்­பட வேண்டும். 13 ஆம் திருத்தம் கொண்­டு­வந்து இந்த ஆண்­டுடன்  31 ஆண்­டுகள் ஆகின்­றன. எனினும் தீர்­வுகள் தொடர்பில் இன்னும் முரண்­பா­டுகள் எழுந்­த­வண்­ணமே உள்­ளன.

 அடுத்த ஆண்டு நிறை­வுக்குள் இந்த பிரச்­சி­னை­களை சுமு­க­மாக பெறக்­கூ­டிய வகை­யி­லான ஒரு தீர்வு கிடைக்கும் என எதிர்­பார்க்க முடியும். ஆகவே  இந்தப் பிரச்­சி­னைகள் அனைத்­தையும் எவ்­வாறு தீர்ப்­பது என்ற பொது இணக்­கப்­பாடு ஒன்­றிற்கு வர­வேண்டும்.

அதி­காரப் பர­வ­லாக்கல் விட­யத்தில் வெஸ்ட்­மிஸ்டர் முறைமை ஒன்றை நோக்கிப் பய­ணிக்­கவும் நாம் ஆராய்ந்து வரு­கின்றோம். நியூசி­லாந்து முறைமை போன்­ற­தொரு முறை­மையும் ஆரா­யப்­பட்டு வருகின்றது.

அரசியலமைப்பு தொடர்பிலான இடைக்கால அறிக்கை முழுமையாக சாதகமான தன்மைகளை கொண்டுள்ளது என கூற முடியாது. முரண்பாடுகளும் உள்ளன. அனைவரும் இணைக்கம் தெரிவிக்காத சில விடயப்பரப்புகள் உள்ளன.

எனினும் பொது இணைக்கப்பாட்டு கருத்து ஒருமிப்பு ஒன்றை பெற்றுக் கொள்வதே இப்போது அவசியமான ஒன்றாகும். இந்த சந்தர்ப்பம் எமக்கு மிகவும் முக்கியமான கட்டமாகும்.

அனைவரும் இணக்கப்பாடு ஒன்றுக்கு வரும் நல்ல வாய்ப்பு உள்ளது. அதை நோக்கியே நாமும் பயணித்து வருகின்றோம் என பிரதமர் தெரிவித்தார்.


SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network