திங்களன்று நோன்புப் பெருநாள்


புனித ரமழான் மாதத்தை முப்பதாக நிறைவு செய்வதென கொழும்புப் பெரிய பள்ளிவாயலில் இன்று (24) மாலை கூடிய பிறைக் குழு தீர்மானித்துள்ளது.
நாட்டின் எப்பாகத்திலும் ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை தென்படாததை உறுதி செய்ததையடுத்து இந்த தீர்மானம் பெறப்பட்டுள்ளது.
இதன்படி நாளை மறுதினம் (26) திங்கட்கிழமை நோன்புப் பெருநாள் எடுப்பதாகவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாயல் பிறைக்குழு தெரிவித்தது