இலங்கையில் மியன்மார் சகோதரி பாலியல் துஷ்பிரயோகம்;முகாமில் உள்ள ஏனைய முஸ்லிம்கள் அச்சம்இலங்கைக்கு  அடைக்கலம் தேடி வந்த முஸ்லிம் சகோதரி ஒருவர் பொலிஸ் காமுகன் ஒருவரினால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யபட்டுள்ளார். மூத்த முஸ்லிம் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் இதனை உறுதிப்படுத்தினார்.

பொலிஸார் ஒருவன் இதனை செய்திருக்கிற போதிலும், இந்த அசிங்கமான சம்பவத்தை தனி நபர் ஒருவர் செய்ததாக காண்பிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் முஸ்லிம் சட்டத்தரணிகளின் பல்வேறுகட்ட முயற்சிகளினால், பொலிஸ் காரன் ஒருவன்தான் இந்த பாலியல் துஸ்பிரயோகத்தை செய்தான்
 என்பது முதற்கட்ட விசாரணைகளிலிருந்து அறியவருகிறது.

மீறிகன முகாமில் தங்கியுள்ள மியன்மார் முஸ்லிம்களுக்கு முஸ்லிம் நலன்விரும்பிகள் நோன்பு நோற்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் தமது சமூகம் சார்ந்த ஒரு சகோதரி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை பற்றி மியன்மார் முஸ்லிம்கள் கடும் கவலை பட:டுள்ளனர். அத்துடன் தாம் தொடர்ந்து முகாமில் தங்கவும் அச்சப்ட்டுள்ளனர்.

குறித்து விடயமானது மிகக் கேவலமானது என வர்ணித்த சிராஸ் நுர்தீன் தனது இதைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுததாக தனது துயரத்தை ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் பகிர்ந்து கொண்டதுடன், சட்டத்திற்கு உட்டபட்டு குறித்த சகோதரிக்கு  நீதி கடைக்க அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ளப் போவதாக உறுதியளித்தார்.