இன்று முன்னாள் பிரதமர் டட்லி சேனாநாயக்கவின் பிறந்த தினம்


முன்னாள் பிரதமர் டட்லி சேனாநாயக்கவின் பிறந்த தினம் இன்றாகும். சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ் சேனாநாயக்க மற்றும் திருமதி மோலி டுனுவில ஆகியோரின் மூத்த புதல்வராக 1911ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் திகதி பிறந்தார்.
மக்கள் பிரதிநிதியாகவும், அமைச்சராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும், பிரதமராகவும் 1936ம் ஆண்டிலிருந்து அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்த இவர் 1973ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம்திகதி இவரது 61 வயதில் காலமானார்.
இவரது பிறந்ததினத்தை முன்னிட்டு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பொரளை சேனாநாயக்க சுற்றுவட்டத்திற்கு அருகாமையிலுள்ள வைபவம் ஒன்று இன்று நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.