இப்ஃதார் நிகழ்வில் ஓ.பன்னீர்செல்வம்அ.தி.மு.க.கட்சி சார்பில் ரமழான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்கினார். கட்சியின் பொருளாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

ஜெயலலிதா ஹஜ் பயணிகளுக்கு ஏராளமான நிதியுதவி வழங்கினார். நோன்பு கஞ்சிக்காக 4 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசியை வழங்கினார். இந்த திட்டம் இஸ்லாமிய நாடுகளில் கூட நடைமுறை படுத்தப்பட வில்லை. எனவே இஸ்லாமிய நாடுகளும் ஜெயலலிதாவின் திட்டங்களை பாராட்டின.

இஸ்லாமிய மக்களிடம் ஜெயலலிதா காட்டிய அக்கறை, இஸ்லாமிய மக்களிடம் ஜெயலலிதா காட்டிய அன்பை போல சிறுபான்மை மக்களுக்கு நாங்கள் என்றும் பக்க பலமாகவும், பாதுகாப்பாகவும் இருப்போம்.