நாவிதன்வெளி பிரதேசத்தின் இன ஐக்கியத்திற்கான இப்தார் நிகழ்வு


நாவிதன்வெளி பிரதேசத்தின் இன ஐக்கியத்திற்கு எடுத்துக் காட்டாக நாவிதன்வெளி பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. 

நாவிதன்வெளி பிரதேச சபையின் செயலாளர் எம்.இராமக்குட்டி தலைமையில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் சவளக்கடை மத்தியமுகாம் ஜம்மிய்யத்துல் உலமா சபைத் தலைவர் மெளலவி ஏ.சி.தஸ்தீக் (மதனி) மார்க்க சொற்பொழிவினை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.