இலங்கை முஸ்லிம்களுக்கு தலைமை தாங்க யூசுப் முப்தி முன்வர வேண்டும்இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள இக்கால கட்டத்தில் இலங்கை முஸ்லிம்களின் மறுமலர்ச்சிக்கான சிறந்த வழிகாட்டல் உருவாக்கப்படவேண்டும் இந்த வழிகாட்டலையும் தலைமைப் பொறுப்பையும் இஸ்லாமிய பிரச்சாரகர் யூசுப் முப்தி பொறுப்பேற்க வேண்டும் என சிலோன் முஸ்லிம் டிஜிடல் ஊடகத்தின் பிரதானி பஹத் ஏ.மஜீத் தெரிவித்துள்ளார்.

ஐ.ஆர்.எப் இன் வருடாந்த தலைமைத்துவ சபைக் கூட்டத்தில் பிரதான உரையற்றிய பஹத் ஏ.மஜீத் இவ்வாறு குறிப்பிட்டார்,

இலங்கையெனும் தேசத்தை மதங்கள் மூலமாக சமாதானப்படுத்த வேண்டும், அதற்கு இஸ்லாமே முன்னுதாரணம் நமது இஸ்லாமியத் மூலம் சகவாழ்வு சமாதானத்தை ஏனைய மத சமூகங்களுக்கு சொல்ல வேண்டும், உலகிற்கு நாம் படைக்கப்பட்ட நோக்கமே நமது மார்க்கத்தை எத்தி வைப்பதற்கே, இன்று முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகியுள்ளது, மத அனுஸ்டானம் கடமைகளை நிறைவேற்றுவதில் பொடுபோக்கு காணப்படுகிறது இவைகள் களையப்பட வேண்டும் இவையனைத்தையும் ஒரு அமீருக்கு கீழ்பட்டு செயற்படுத்த திட்டமிட வேண்டும், இலங்கை முஸ்லிம்களின் மீது அதிக கரிசனை கொண்டுள்ள யூசுப் முப்தியே இதற்கு சரியானவர் எனவும் தெரிவித்தார்.

ஜம்மியதுல் உலமா, முஸ்லிம் கவுன்சில், சூறா சபை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் இவரின் கீழ் வரப்படின் நிறைய மாற்றங்களும் நடைபெறும்.