குன்றும் குழியுமாக இருந்த இறக்காமத்தின் பிரதான வீதி காபட் இடப்படுகிறதுஇறக்காமத்தின் பிரதான வீதி மிக நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகின்றது.இப் பிரதான வீதி ஊடகவே அக்கரைப்பற்று அம்பாரை போக்குவரத்து சேவை இடம் பெற்று வருகின்றது.

அத்தோடு இப் பழுதடைந்த வீதியால்   பயணிக்கும் வாகனங்கள் மற்றும் நடை  பயணிகள் மிகவும் சிரமங்களை  எதிர் நோக்கி வருகின்றனர்
.இதை உணர்ந்த இறக்காமம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் இப் பிரச்சினை தொடர்பாக முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து நகர திட்டமிடல் அமைச்சின் ஊடாக சுமார் 86 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

 இவ் வீதி மூன்று கிலோ மீற்றர் நீளமுடைய  காபட்  வீதியாக புனரமைக்கப்படுவதுடன் இத் திட்டத்திற்கான    கேள்விப் பத்திரமும் கோரப்பட்டுள்ளது என இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜபீர் மௌலவி எமது சேவைக்கு தெரிவித்தார்.

மேலும் இவ்வளவு பாரிய நிதியை முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவுப்  ஹக்கீமால் மாத்திரமே எமதுாருக்கு ஒதுக்கீடு செய்ய முடியுமெனவும் இதற்காக எமது தலைவருக்கு இறக்காமம் மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எஸ்.எம்.சன்சீர்
இறக்காமம்(விசேடசெய்தியாளர்)