மங்களவை புறக்கணித்த ரணில்! உரையாற்றவும் அனுமதி மறுப்புஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை அமுல்படுத்த அமைச்சரவை மத்திய ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பித்துள்ளார்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக கடுமையாக செயற்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த முக்கியமான குழுவில் நியமிக்கப்படவில்லை.
ரவி கருணாநாயக்க, மஹிந்த சமரசிங்க, சாகல ரத்னாயக்க, விஜயதாச ராஜபக்ச, திலக் மாரப்பன, ருவன் விஜேவர்தன மற்றும் ஹர்ஷா டி சில்வா ஆகியோரை, பிரதமர் தனது தலைமையின் கீழ் அந்த குழுவிற்கு நியமித்துள்ளார்.
இந்த பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், இது பிழையாக உள்ளது இதில் மங்கள சமரவீரவின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் என அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
நியமிப்பில் சிக்கல் இருந்தால் அமைச்சர் மங்கள சமரவீரவுடன் சேர்த்து இன்னும் ஒரு சுதந்திர கட்சி அமைச்சரை நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பரிந்துரைக்கமைய சுசில் பிரேமஜயந்தவின் பெயர் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நிதி அமைச்சில் அதிகளவில் வேலைகள் இருப்பதாகக் கூறிய மங்கள சமரவீர, இந்த குழுவில் ஒரு பகுதியாக இருக்க மறுத்துவிட்டார்.
இதற்கிடையில் பாராளுமன்றத்தில் காணாமல் போனோர் தொடர்பில் விவாதத்தின் போது மங்கள சமரவீரவிற்கு உரையாற்ற அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.